அதிக வேகம்:மோட்டார் சைக்கிளில் வந்தவருக்கு எமனானது

Print lankayarl.com in இலங்கை

இன்று காலை 5 மணியளவில் அதிக வேகத்தின் காரணமாக பத்தேகம தெல்கஹ சந்தியில் மோட்டார் சைக்கிள் ஒன்று பாதையை விட்டு விலகி அருகில் கட்டிடத்தில் மோதியதில் ஏற்பட்ட விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதே பகுதியை சேர்ந்த 32 வயதுடைய தினேஷ் அமில என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சமையற்காரராக கடமை புரியும் இவர், நேற்று இரவு இடம்பெற்ற நிகழ்வொன்றிற்கு உணவு சமைத்து கொடுத்துவிட்டு வீடு திரும்பும் போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.