பண முறைகேட்டு வழக்கு:நாமல் மீதான வழக்கு ஒத்திவைப்பு!

Print lankayarl.com in இலங்கை

சட்ட விரோதமாக பெறப்படட 30 மில்லியன் ரூபா நிதியை கவர்ஸ் கோப்பரேட் எனும் நிறுவனத்தில் முதலீடு செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக வழக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இவ்வழக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நீதிபதி பிரதீப் ஹெட்டியாரச்சி முன்னிலையில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.இதன்போது பிரதிவாதிகள் தரப்பின் சிரேஷ்ட சட்டத்தரணிகள் வேறொரு வழக்கில் ஆஜராகி உள்ளதால், இவ் வழக்கை வேறொரு நாளில் விசாரிக்குமாறு பிரதிவாதிகள் தரப்பின் சட்டத்தரணிகள் கோரிக்கை விடுத்தனர்.

இதை கருத்திற்கொண்டு இவ் வழக்கை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 03ம் திகதிக்கு ஒத்தி வைத்தது நீதிமன்றம்