வவுனியாவில் அதிகரிக்கும் எச்ஐவி தொற்று:மக்களுக்கு எச்சரிக்கை!

Print lankayarl.com in இலங்கை

உலக எயிட்ஸ் தினம் டிசம்பர் மாதம் முதலாம் திகதி உலகமுழுவதும் நினைவுகூறப்படுகிறது.அந்தவகையில் எயிட்ஸ் நோய் தொற்று தொடர்பாக நேற்று வவுனியா பொது வைத்தியசாலையில் வவுனியா பாலியல் நோய்தடுப்பு வைத்திய அதிகாரி கே.சந்திரகுமார் தலைமையில் நேற்று ஊடக சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

வவுனியாவில் மட்டும் 2003 இருந்து 2018 ஆம் ஆண்டு வரை 20 எயிட்ஸ் நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவித்த அதேவேளை இந்த ஆண்டும் ஒருவர் இனம்காணப்படடதாக தெரிவித்தார்.

வவுனியாவில் எயிட்ஸ் நோய் பரவுவதற்கான முக்கிய காரணியாக பாலியல் தொழிலாளர்கள் அதிகரித்துள்ளமையே காரணம் என குறிப்பிட படுகிறது.