வவுனியாவில் வாள்களுடன் சுற்றிய மூவர் கைது

Print lankayarl.com in இலங்கை

வவுனியா கோவில்குளம் பகுதியில் கத்தி வாள்களுடன் ஆட்டோவில் பயணித்த மூவர் போலீசாரால் கைதுசெய்யப்பட்டனர்

இது பற்றி மேலும் தெரிய வருவதாவது…..

ஆங்கில புதுவருட பிறப்பிற்கு முதல் நாள்(31) முக்கக்கர வண்டியில் 3 இளைஞர்கள் நகர் புறம் நோக்கி பயணித்ததை அவதானித்த அப்பகுதியில் பாதுகாப்பு பணிகளுக்கு நின்ற போலீசார் அவர்களை மறித்து சோதனையிட்டபோது அவர்கள் வசமிருந்த வாள்கள் கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டு அவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வவுனியா ஆச்சிபுரம், எல்லப்பர்மருதங்குளத்தைச் சேர்ந்த 23,23,24 வயதுடைய மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் அவர்களிடம் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.