நல்லூரில் களவாடியவர் முல்லையில் பிடிபட்டார்

Print lankayarl.com in இலங்கை

யாழ்.போதனா வைத்தியசாலையில் நோயாளியிடம் தங்க நகையைத் திருடிய குற்றசாட்டில் பெண்ணொருவர் முல்லைத்தீவில் வைத்து கைதுசெய்யப்படடார்.

மேலும் நல்லூர் ஆலயத் திருவிழாக் காலத்தில் பெண் ஒருவரிடம் சங்கிலி அறுத்தவர் என்பதையும் விசாரணைகளில் ஒப்புக்கொண்டார்.

யாழ்.போதனா வைத்திய சாலைக்கு சிகிச்சைக்கு வருவோரின் தங்க நகைகள் அடிக்கடி களவாடப்படுவது பற்றிய முறைப்பாடுகளின் அடிப்படையில் அங்குள்ள கண்காணிப்பு கமராக்களின் (சிசிரிவி) உதவியுடன் அதுதொடர்பான விபரம் சேகரிக்கப்பட்டது.

அதன்மூலம் பெண்ணொருவரே இவ்வாறான செயல்களில் ஈடுபடுவது கண்டு பிடிக்க பட்டது.


களவாடப்படுவது தொடர்பில் வைத்தியசாலை நிர்வாகத்திற்கு தொடர்ச்சியாக பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றன.

அது தொடர்பில் வைத்திய சாலை வளாகத்தினுள் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கமராக்களின் (சிசிரிவி) உதவியுடன் நகைகளை திருடி வந்த பெண்ணொருவர் அடையாளம் காணப்பட்டார்.அவரை வைத்தியசாலை பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் துணையுடன் வைத்தியசாலை நிர்வாகம் மடக்கி பிடித்து யாழ் பொலிஸாரிடம் கடந்த ஒரு சில வாரங்களுக்கு முன்னர் ஒப்படைத்தனர்.

இந்நிலையில் மீண்டும் கடந்த சனிக்கிழமை வைத்தியசாலைக்கு வந்த வயோதிப பெண்ணொருவரிடம் இருந்து சங்கிலி ஒன்று களவாடப்பட்டது தொடர்பில் தெரிவித்த முறைபாடடை அடுத்து மீண்டும் சிசிரிவி கேமராக்களை சோதனை செய்ததன் மூலம் ஏற்கனவே நகை திருடி போலீசில் ஒப்படைக்கப்படட பெண்ணே மீண்டும் இத்திருட்டில் ஈடுபட்டுள்ளார் என கண்டறியப்பட்டது.

இது தொடர்பில் மீண்டும் யாழ் போலீசாருக்கு அறிவிக்க பட்டது.இதனடிப்படையில் குறித்த பெண் உட்பட மேலும் இரு பெண்கள் சேர்த்து முல்லைத்தீவில் கைதுசெய்ய படடனர்.

அவரிடம் விசாரணைகளின் அடிப்படையில் இருந்து பெற்றுக்கொண்ட தகவலை அடுத்து அவர் களவாடும் நகைகளை பெற்றுக்கொள்ளும் நகை வேலை செய்ப்பவரும் கைதுசெய்யப்படடார்.

இதேவேளை நல்லூர் ஆலயத் திருவிழாக் காலத்தில் பெண்ணொருவரிடம் சங்கிலி அறுத்ததையும் அவர் ஒத்துக்கொண்டார்

வழக்குகளை விசாரணை செய்த நீதிவான், சந்தேகநபருடன் கைது செய்யப்பட்ட மூவரையும் நகைத் தொழிலாளியையும் பிணையில் விடுவித்தார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் திருடிய நகை சந்தேகநபரிடம் மீட்கப்பட்டதால் அந்த வழக்கில் அவருக்குப் பிணை வழங்கப்பட்டது.

எனினும் நல்லூர் ஆலயத் திருவிழாவில் பெண் ஒருவரிடமிருந்து அபகரித்த சங்கிலி உருக்கப்பட்டுள்ளது. அதனால் அந்த வழக்கில் சந்தேகநபரான பெண்ணை வரும் 9ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதிவான் அன்ரனி சாமி பீற்றர் போல் உத்தரவிட்டார்.