மானிப்பாயில் முதியவரை மோதித்தள்ளிய மோட்டார் சைக்கிள்

Print lankayarl.com in இலங்கை

யாழ்ப்பாணம், மானிப்பாய் வீதி ஆறுகால் மடத்தடிப் பகுதியில் நேற்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் அதே இடத்தை சேர்ந்த முதியவர் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.

குறித்த முதியவர்(திரவியம் வியஜராசா) மானிப்பாய் வீதீ ஆறுகால்மடப் பகுதியில் சிறிய கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார் அதை திறப்பதற்காக சென்ற வேளையிலே இவ் விபத்து நடைபெற்றுள்ளது என தெரிவிக்க அறியமுடிகிறது.

குறித்த குடும்பஸ்தர் வீதியை கடக்க முற்பட்ட போது யாழ்ப்பாணத்தில் இருந்து மானிப்பாய் நோக்கி மிக வேகமாக பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மோதியுள்ளது.

இதனால் வீதியில் இருந்து தூக்கி எறியப்பட்ட குடும்பஸ்தர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த யாழ்.பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.