குழந்தையை உயிருடன் புதைத்த தாய்.ஹட்டனில் சம்பவம்

Print lankayarl.com in இலங்கை

கணவருக்கும் குழந்தையின் தாயிற்கும் இடையில் ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக 28 நாட்களான சிசுவை உயிருடன் புதைத்து கொலை செய்த தாய் மற்றும் தாயின் தாய் ஆகிய இருவரை ஹட்டன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ஹட்டன், கொட்டகலை யூனிபில்ட் தோட்ட பகுதியில் இன்று (03) காலை 11.30 மணி அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஹட்டன் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

பிறந்து 28 நாட்களான குறித்த சிசுவிற்கு பால் கொடுத்து உறங்க வைப்பது போல் தான் வீட்டுக்கு முன்பால் குழி தோன்றி புதைத்துள்ளதாகவும் சிசு காணாமல் போன சம்பவம் தொடர்பில் பிரதேச மக்களால் ஹட்டன் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை அடுத்து ஹட்டன் பொலிஸார் குறித்த சிசு புதைக்கபட்ட இடத்தை இனங்கண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

திவ்யநாதன் வென்னிலா என்ற சிசுவே இவ்வாறு சடலமாக மீட்கபட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பெண்ணின் கணவர் கண்டியில் தொழில் செய்து வருவதாகவும் கணவர் வீட்டில் இல்லாத சந்தர்ப்பத்திலேயே இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சிசுவின் சடலம் சட்ட வைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா கிழங்கன் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கபட்டுள்ளதாகவும் இரு பெண்களையும் ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கையினை மேற்கொள்ளப்படும் ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்