வவுனியாவில் போலீசாருக்கு இலஞ்சம் வழங்கியவருக்கு நீதிமன்றில் கொடுத்த தண்டனை

Print lankayarl.com in இலங்கை

வவுனியாவில் வைக்கப்பட்டிருந்த போலீசாரின் உருவச்சிலைக்கு இலஞ்சம் வழங்கிய இருவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இது பற்றி மேலும் தெரியவருவதாவது.....

வவுனியாவில் அதிகரித்து வரும் விபத்துக்களை கருத்திற்கொண்டு வவுனியா போக்குவரத்து பொலிஸாரினால் அதிவேகத்தினை கணிக்கும் கருவியுடனான பொலிஸ் உருவபொம்மையொன்று வவுனியா எ9 வீதியில் வைக்கப்பட்டிருந்தது.

அந்த உருவபொம்மைக்கு இலஞ்சம் வழங்குவது போன்று சமூக வலைத்தளத்தில் (tik tok) வீடியோ செய்து பதிவிட்ட லீசிங் நிறுவனத்தில் பணியாற்றும் இரு ஊழியர்களை நேற்றையதினம் பொலிஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.

இதன் போது குறித்த இரு இளைஞர்களுக்கும் பிணை வழங்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர். தற்போது அவ்விடத்திலிருந்த பொலிஸ் உருவபொம்மையினை பொலிஸார் அகற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.