இலங்கை வரும் சுற்றுலா பயணிகளுக்கு அரசாங்கம் முக்கிய அறிவிப்பு!

Print lankayarl.com in இலங்கை

நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலை சுற்றுலா பயணிகளுக்கு பாதிப்பாக அமையாது என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரவிநாத் ஆரியசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த நிலைமை சுற்றுலாத் துறைக்கு அழுத்தம் கொடுக்காதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய அரசியல் பிரச்சினையை பாரிய ஆபத்தான பிரச்சினையாக காட்ட சில நாடுகள் முயற்சிப்பதாக அவர் கூறியுள்ளார்.

அத்துடன் தற்போதைய காலப்பகுதி சுற்றுலாத்துறைக்கு பாதிப்பு ஏற்படாதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது நாட்டில் இடம்பெற்று வருகின்ற இங்கிலாந்து - இலங்கை கிரிக்கெட் போட்டியை பார்ப்பதற்காக பாமி - ஆமி என அடைப்பாளப்படுத்தும் 4000 பிரித்தானிய கிரிக்கெட் ரசிகர்கள் இணைந்திருந்ததாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.