பிரதமராக ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் நியமிக்கப்போவதில்லை! - ஜனாதிபதி மைத்திரி திட்டவட்டம்

Print lankayarl.com in இலங்கை

பிரதமராக ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் ஒருபோதும் நியமிக்கப்போவதில்லை என தெரிவித்துள்ளதன் மூலம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் அதிகாரப்போட்டியை தீவிரப்படுத்தியுள்ளார்

வெளிநாட்டு செய்தியாளர்களிற்கு கருத்து தெரிவிக்கையிலேயே மைத்திரி இதனை தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் -

ரணில்விக்கிரமசிங்க மோசமான ஊழல்பேர்வழி. ஐக்கியதேசிய கட்சிக்கு பெரும்பான்மையிருந்தால் கூட அவர்களை ரணில் விக்கிரமசிங்கவை என்முன்னால் நிறுத்தவேண்டாம். நான் அவரை பிரதமராக்க மாட்டேன் என ஐக்கியதேசிய கட்சியினரிடம் தெரிவித்துள்ளேன். எனது வாழ்நாளில் அவரை பிரதமராக நியமிக்கப்போவதில்லை.

2015 இற்கு பின்னர் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தின் காலத்தில் இடம்பெற்ற ஊழல்கள் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்கு ஆணைகுழுவொன்றை அமைக்கப்போகிறேன். அவர் ஊழல்மிகுந்தவர், அவரது பொருளாதார கொள்கைகள் உள்ளுர் தொழில்துறைக்கு பொருத்தமானவையில்லை.

எங்கள் கலாச்சாரத்திற்கு பொருத்தமில்லாத தீவிரதாரளமயவாத கொள்கையை ரணில் விக்கிரமசிங்க நடைமுறைப்படுத்த முயன்றார். உள்ளுராட்சி தேர்தலில் தோல்வியடைந்தவேளை ரணில் விக்கிரமசிங்கவை பதவிவிலகுமாறு எவ்வாறு மன்றாடினேன் என விபரித்துள்ள சிறிசேன செய்தியாளர்கள் மத்தியில் கண்ணீர் சிந்தியுள்ளார்.