வடிவேல் சுரேஷ் மீது கிரனேட் தாக்குதல் முயற்சி!

Print lankayarl.com in இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் தனக்கு கிடைக்க வேண்டிய உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் தெரிவித்துள்ளார். இன்றையநாடாளுமன்ற அமர்வில் தனது உரையின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அண்மையில் தனது ஆசனத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது வெளிநபர்கள் வருகை தந்து தான் இனவாதி என தெரிவித்து குழப்ப நிலையை ஏற்படத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் சிறுபான்மை உறுப்பினர் என்ற வகையில் தனக்கு நாடாளுமன்றத்திலும் வெளியிலும் தனது பாதுகாப்பு தொடர்பில் எவ்வித நம்பிக்கையும் இல்லை என அவர், சபாநாயகரிடம் தெரிவித்துள்ளார்.

இதன்போது தன் மீது கைக்குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட இருந்ததாகவும் இந்த விடயம் தொடர்பில் பசரை மற்றும் பதுளை பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்திருப்பினும் இதுவரையில் நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தனக்காக தன்னுடைய கட்சிக்காரர்கள் பாதையில் இறங்கி போராட்டம் நடத்த தயாராக இருப்பதாகவும் இருப்பினும் தான் இனவாதி இல்லை என்பதால் அவற்றை தடுத்து நிறுத்தி உள்ளதாகவும் குறிப்பிட்ட அவர், தொடர்ந்தும் இந்நிலைமை நீடித்து தன்னை இனவாதியாக மாற்றவா நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்நிலையில் இந்த விடயம் தொடர்பில் தான் பொலிஸ் மா அதிபருக்கு அறிவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக சபாநாயகர் பதில் அளித்தார்.