எட்டு சிறைச்சாலை அதிகாரிகள் இடை நீக்கம்!

Print lankayarl.com in இலங்கை

போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட சந்தேக நபர் சிறைச்சாலையிலிருந்து தப்பிச் சென்ற சம்பவம் தொடர்பில் எட்டு சிறைச்சாலை அதிகாரிகளை சேவையிலிருந்து இடை நிறுத்தியுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த எட்டு சிறைச்சலை அதிகாரிகளும் தனது கடமைகளை உரிய முறையில் நிறைவேற்றத் தவறிய குற்றச்சாட்டின் பிரகாரமே இவ்வாறு சேவையிலிருந்து இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை தப்பிச் சென்ற குறித்த கைதியை கைதுசெய்வதற்காக பொலிஸ் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.