வங்காலையில் சிக்கிய 1 கோடி பெறுமதியான கஞ்சா

Print lankayarl.com in இலங்கை

வங்காலை கடற்பகுதியில் சுமார் ஒரு கோடி 84 இலட்சம் ரூபாய் பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் ஒருவர் சிக்கியுள்ளார்.

அதிகாலை இடம்பெற்ற இச் சம்பவத்தில் உயிலங்குளம் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரே கடற்படையால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாப்பொதிகள் மற்றும் கைது செய்யப்பட்ட நபர் வங்காலை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.வங்காலை பொலிஸார் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.