பெண்ணிடம் தாலிக்கொடி அபகரிப்பு:களுவாஞ்சிகுடியில் தொடரும் திருட்டுக்கள்

Print lankayarl.com in இலங்கை

வீதியால் நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணிடம் மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் தாலிக்கொடி அறுத்த சம்பவம் நேற்று மாலை மட்டக்களப்பு – களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நடைபெற்றுள்ளது.


இது பற்றி மேலும் தெரியவருவதாவது....

களுவாஞ்சிகுடி 9ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த கௌரி லோகநாதன் எனும் பெண் உணவுக்காக இடியப்பத்தை பெற்றுக்கொண்ட வாழியை ஒப்படைத்து விட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த குறித்த பெண்ணிடம் பல்சர் ரக மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு சந்தேக நபர்களால்
6 பவுண் பெறுமதியான தாலிக்கொடி அபகரித்து செல்லப்பட்டது.


இதேவேளை களுவாஞ்சிகுடி பகுதியில் 7 திருட்டுச்சம்பங்கள் இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் ஆனாலும் எவரும் கைது செய்யப்படவில்லை என தெரிவிக்க படுகிறது.

இச் சம்பவம் தொடர்பான காட்சிகள் சீசீரிவி கமராமூலம் பதிவாகியுள்ளது. இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி குற்றத்தடுப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்