வவுனியாவில் தொடரும் கஞ்சா வேட்டை:மூவர் கைது

Print lankayarl.com in இலங்கை

வவுனியாவில் கடந்தசில நாட்களுக்கு முன்பு இரு வேறுபட்ட சம்பவங்களில் 8 கிலோ கஞ்சாவுடன் மொவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வவுனியா புதியபேருந்து நிலையதில் கடந்த 7 ம் திகதி காலை வவுனியா போதை தடுப்புபிரிவினர் சோதனையில் ஈடுபட்டிருந்த போது திருகோணமலை நோக்கி பயணித்த பேருந்தில் சோதனையிட்ட போது 4கிலோ கேரள கஞ்சாவினை பையொன்றில் மறைத்து வைத்து கொண்டுசென்ற வாழைச்சேனை பகுதியை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.

அதேதினத்தில் வவுனியா நொச்சிமோட்டை பாலத்திலுள்ள போலீஸ் காவலரணில் யாழில் இருந்து தியத்தலாவை நோக்கிசென்ற வழிமறித்து சோதனையிட்ட போலீசார் பையொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 4கிலோ கேரள கஞ்சாவினை கைப்பற்றினர்.அதேநேரம் அதை உடைமையில் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் வவுனியா மகாறம்பைகுளத்தை சேர்ந்த நபர் ஒருவரும் கைதுசெய்யப்பட்டார்.

கைதுசெய்யபட்டவர்கள் நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்