தனிப்பட்ட விரோதம்: தந்தையை கொலைசெய்த மகன்

Print lankayarl.com in இலங்கை

அம்பலாந்தோட்டை பகலபெரகம பிரதேசத்தில் மகன் தந்தையை கொலை செய்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பூச்சாடி ஒன்றினால் நடத்திய தாக்குதலில் படுகாயமடைந்த தந்தை ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போது உயிரிழந்துள்ளார். தனிப்பட்ட குரோதம் காரணமாகவே இக் கொலை ஏற்பட்டுள்ளது என போலீசார் தெரிவித்தனர்

கொலையுடன் சம்பந்தப்பட்ட மகன் பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளதுடன், சந்தேகநபரை கைது செய்வதற்காக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.