கஞ்சாவை மூலப் பொருளாக கொண்ட மருந்து இலங்கையில் அறிமுகம்

Print lankayarl.com in இலங்கை

அவுஸ்திரேலியாவின் கிரேஸோ பார்மா (Creso Pharma)நிறுவனம் கஞ்சாவை மூலப் பொருளாக கொண்டு மருந்து தயாரிக்கும் கென்னப்போர்ட் 50(CannAFFORD 50) என்ற மருந்து வகையை இலங்கையில் அறிமுகம் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

முதலில் இதற்கான அனுமதியைப் பெற்றுக் கொள்ள
இலங்கையின் ஔடத நிறுவனமான ஸியோகா ஹெல்த் சேர்விஸ் (Ceyoka Health services) நிறுவனத்துடன் உடன்படிக்கை ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்பின்னர் இலங்கையின் ஸியோகா ஹெல்த் சேர்விஸ் நிறுவனத்துடன் இணைந்து இலங்கையில் அந்த மருந்து வகையை அறிமுகம் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.