காலி வீதியில் விபத்து:ஒருவர் பலி

Print lankayarl.com in இலங்கை

காலி வீதியில் தல்பிட்டி சந்திக்கு அருகில் கெப் வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறுகிய வீதி ஒன்றில் இருந்து காலி வீதிக்கு பிரவேசிக்க முற்பட்ட மோட்டார் சைக்கிள் காலி நோக்கி பயணித்த கெப் வாகனத்துடன் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் உயிரிழந்தவர் களுத்துறை பிரதேசத்தைச் சேர்ந்த 18 வயதான இளைஞர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னரே குறித்த இளைஞர் உயிரிழந்துள்ளார்.விபத்து தொடர்பில் கெப் வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், வாத்துவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.