மாணவிகளுக்கு பாலியல் சேட்டை:55 வயது அதிபர் வவுனியாவில் கைது

Print lankayarl.com in இலங்கை

வவுனியாவில் பாடசாலை மாணவிகளுக்கு பாலியல் சேட்டை புரிந்த 55 வயதான பாடசாலை அதிபர் போலீசாரால் கைது செய்ய பட்டுள்ளார்.

வவுனியாவில் உள்ள பாடசாலையொன்றில் அதிபராக கடமையாற்றும் குறித்த நபர் கா.பொ.த (உயர்தரம் ,சாதாரணதரம்) படிக்கும் மாணவிகளுக்கு மாலை நேர பிரத்தியோக வகுப்பு என்ற பெயரில் பாலியல் சேட்டைகளும் கண்களை மூடி தேவாரம் பாடிக்காட்டவேண்டும் என்று கூறி அங்கசேடடைகள் புரிந்துள்ளார்.இதனை பொறுக்க முடியாத மாணவிகள் தமது பெற்றோரிடம் கூறியுள்ளனர்.

இத்தயையடுத்து வவுனியா பொலிஸ் நிலையத்தில் குறித்த அதிபருக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் முன்னிலையில் ஆயர்படுத்தவுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.