மூன்று மாகாணங்களுக்கான புதிய ஆளுனர்கள் நியமனம்

Print lankayarl.com in இலங்கை

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இன்று 03 மாகாணங்களுக்கான புதிய ஆளுனர்கள் நியமிக்கப்பட்டுள்ளது

இது பற்றி ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி ஊவா மாகாண ஆளுனராக கீர்த்தி தென்னகோனும் சப்ரகமுவ மாகாண ஆளுனராக சிரேஷ்ட பேராசிரியர் தம்ம திஸாநாயக்கவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் வடக்கு மாகாண ஆளுனராக டொக்டர் சுரேன் ராகவன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை தென் மாகாணத்திற்கான ஆளுனராக இதுவரையில் யாரும் நியமிக்கப்படவில்லை.

ஜனாதிபதி செயலகத்தில் வைத்து இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.