நுவரெலியாவில் கடும் பனிப்பொழிவு

Print lankayarl.com in இலங்கை

இம்மாதம் பொழியும் பனி மழையால் நுவரெலியாவிற்கு பெரும் சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது.

இலங்கையின் அணைத்து பிரதேசத்திலும் தற்போது குளிரான காலநிலை நிலவிவருகிறது.அந்த வகையில் அதிக பனிபொழியும் இடமான நுவரெலியாவிலும் கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது.

எனினும் இதனால் தோட்ட தொழிலாளர்கள் உட்பட விவசாயிகளும் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர்.கடும் பனிபொழிவால் மரக்கறி வகைகளை பாதுகாப்பதற்கு அவர்கள் கடும் முயற்சி எடுத்து வருகின்றனர்.

இவ்வாறு தொடர்ச்சியாக பனி மழை பெய்தால், இனி வரும் வாரங்களில் மரக்கறி தட்டுப்பாடும் ஏற்படலாமென விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.