சாராயம் குடித்துவிட்டு சென்ற நபருக்கு நீதிமன்றம் கொடுத்த தண்டனை

Print lankayarl.com in இலங்கை

சாராயம் குடித்துவிட்டு வீதியில் நின்று தகாத வார்த்தைகளினால் தூற்றியதாக போலீசாரால் கைதுசெய்யப்படடவருக்கு ஒருமாத கட்டாய சிறைதண்டனை வழங்கப்பட்டுள்ளது.

திருகோணமலை, கோமரங்கடவெல பகுதியில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.ஸ்ரீ பக்மிகம பகுதியைச் சேர்ந்த 39 வயதான நபருக்கே இவ்வாறு தீர்ப்பளிக்க பட்டுள்ளது.

வீதியில் ஒழுங்கீனமாக நடந்தமை,வீதியில் செல்லுவோருக்கு தகாத வார்த்தைகளினால் தூற்றியமை போன்ற செயற்பாடுகளை ஈடுபட்டதால் திருகோணமலை நீதிமன்ற நீதிவான் எம்.எச்.எம்.ஹம்ஸா முன்னிலையில் குறித்த நபரை இன்று ஆஜர்படுத்திய போதே இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது.