கொழும்பு துறைமுக நகர கடலை நிரப்பும் பணிகள் முடிவு

Print lankayarl.com in இலங்கை

கொழும்பு துறைமுக நகர நிர்மாணப் பணிகளுக்கான கடலை நிரப்பும் பணிகள் நிறைவடைந்துள்ளது.

இதனை சம்பிரதாயபூர்வமாக அறிவிப்பதற்கான நிகழ்வு துறைமுக நகரில் இடம்பெற்றுள்ளது. இதன்போது பெருநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க உரையாற்றினார். இலங்கைக்கான சீன தூதுவர் உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டனர்.

சீனத் தூதுவர் Cheng Xueyunan உரையாற்றுகையில் துறைமுக நகரின் எதிர்கால அபிவிருத்திகளை விரைவாக மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளதாக தெரிவித்தார்.

துறைமுக நகரத்திற்காக கடலை நிரப்பும் நடவடிக்கையின் காரணமாக, சில பிரதேசங்களில் கடற்கரைகள் அரிப்புக்குள்ளாவதாக சிலரால் முறைபாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பாட்டலி சம்பிக்க இதன் போது தெரிவித்துள்ளார்.

துறைமுக நகரத்தின் நிர்மானப்பணிகளை முன்னெடுத்துவரும் சீன நிறுவனத்தின் ஊடாக குறித்த பகுதிகளை புனரமைக்க தீர்மானித்துள்ளதாகவும் அவர் கூறினார்