6 கோடி பெறுமதியான ஹெரோயின்:ஒருவர் கைது

Print lankayarl.com in இலங்கை

பொலிஸ் போதைப் பொருள் குற்றத் தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது 5 கிலோ 24 கிராம் நிறையுடைய ஹெரோயின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கடுவெல, கொத்தலாவல பகுதியில் நேற்று (16) இரவு 8.50 மணி அளவில் குறித்த ஹெரோயினுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் முச்சக்கர வண்டி ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்டுள்ள ஹெரோயினின் பெறுமதி சுமார் 6 கோடியே 2 இலட்சத்து 88 ஆயிரம் ரூபா எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.