மட்டகளப்பில் கூறிய ஆயுதத்தால் குத்தி ஒருவர் கொலை

Print lankayarl.com in இலங்கை

மட்டக்களப்பு மீராவோடை பகுதியில் இடம்பெற்ற கைகலப்பில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் பற்றி தெரியவருவதாவது...
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீராவோடை கிராமத்தில் இரு இளைஞர் அணிகளுக்கிடையிலான வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியது.

இதில் அதே கிராமத்தை சேர்ந்த சனூஸ் முஹம்மத் ஸக்கீல் (வயது 16) என்ற இளைஞன் கூறி ஆயுதமென்றால் குத்தப்பட்டு இரத்த வெள்ளத்தில் கிடந்தார்.இதனால் அருகிலிருந்தவர்கள் உடனடியாக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்தபோதும் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.

இச் சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சம்வத்துடன் தொடர்புடைய மேலும் ஒரு இளைஞனைத் தேடி வருவதாகவும் தெரிவித்தனர்.

இதேவேளை கொல்லப்பட்ட இளைஞனின் சடலம் உடற்கூறாய்வுப் பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.