தூக்கில் தொங்கிய இராணுவ வீரர்:பலாலியில் சம்பவம்

Print lankayarl.com in இலங்கை

யாழ் பலாலி இராணுவ முகாமில் இராணுவ பயிற்சியில் ஈடுபடும் இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கியுளார்.

நேற்று (16) மாலை இடம்பெற்ற இச் சம்பவத்தில் பலாங்கொடைப் பகுதியைச் சேர்ந்த என்.ஜி. வை. ஆரியரட்ண (வயது 22) என்ற இளைஞரே இராணுவ முகாமில் உள்ள மரமொன்றில் தொலைத் தொடர்பு கேபிளினால் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

குறித்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்தமைக்கான காரணம் தெரியவில்லை.

மேலதிக விசாரணைகளை பலாலி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றதுடன், சடலம் பிரேத பரிசோதனைக்காக பலாலி இராணுவ வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.