இ.போ.ச பேரூந்தை வழிமறித்து தாக்குதல்:வவுனியாவில் சம்பவம்

Print lankayarl.com in இலங்கை

வவுனியா பூவரசங்குளம் செட்டிக்குளம் வீதியில் இ.போ.ச நடத்துனரை தனியார் பேரூந்து சாரதி மற்றும் நடத்துனர் சேர்ந்து தாக்கியதில் காயமடைந்த இ.போ.ச ஊழியர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

நேற்று மதியம் 1.30 மணியளவில் வவுனியா எட்டாம் கட்டை பகுதியில் இடம்பெற்ற இச் சம்பவம் பற்றி தெரியவருவதாவது

வவுனியாவிலிருந்து பூவரசங்குளம் ஊடாக செட்டிக்குளம் நோக்கி பயணித்த இ.போ.ச பேரூந்தை வவுனியாவிலிருந்து வாரிக்குட்டியூர் நோக்கி பயணித்த தனியார் பேரூந்து வவுனியா எட்டாம் கட்டை பகுதியில் வழிமறித்து வாய்தர்க்கத்தில் ஈடுபட்டனர்.இதனால் ஏற்பட்ட கருத்து முரண்பாட்டினால் இ.போ.ச நடத்துனர் மீது தனியார் பேரூந்து சாரதி மற்றும் நடத்துனர் சேர்ந்து தாக்குதல் மேற்கொண்டனர் என தெரிவிக்க படுகிறது.

இதே வேலை இத் தாக்குதலில் காயமடைந்தவர் இ.போ.ச நடத்துனர் தா.விக்கினேஸ் (31) என தெரியவந்துள்ளது.இதுதொடர்பான மேலதிக விசாரணைகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.