வவுனியா புதிய பேரூந்து நிலையத்துக்கு முன்னால் மதுபானசாலை:அகற்ற நகரசபையில் தீர்மானம்

Print lankayarl.com in இலங்கை

வவுனியாவில் புதிதாக அமைக்கப்பட்ட பேரூந்து நிலையத்துக்கு முன்பாக திடீரென முளைத்த மதுபானசாலையை அவ் இடத்திலிருந்து அகற்ற வவுனியா நகரசபையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நேற்று இடம்பெற்ற அமர்விலேயே குறித்த தீர்மானம் கொண்டுவர பட்டது. த தே கூட்டமைப்பின் உறுப்பினர் த.பரதலிங்கம் இது தொடர்பாக நாகரசபையின் கவனத்திற்கு கொண்டுவந்த போதே இது தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த மதுபானசாலை அமைந்துள்ள கட்டிடத்தில் மதுபானசாலைக்கு மேல் பகுதியில் தனியார் கல்வி நிறுவனம் ஒன்றுக்கும் கட்டிட உரிமையாளரால் வாடகைக்கு விடப்பட்டுள்ளது எனவும் இதற்காக கட்டிட உரிமையாளருக்கு கடும் கண்டனம் தெரிவிப்பதாக நகரபிதா தெரிவித்தமை குறிப்பிட தக்கது.