யாழில் மோசடி செய்து சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றவர் கைது

Print lankayarl.com in இலங்கை

ஏற்கனவே சாரதி அனுமதி பத்திரம் இடைநிறுத்தப்பட்டிருந்தபோது அதை மறைத்து புதியதொரு சாரதி அனுமதி பத்திரத்தை வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழில் இடம்பெற்ற இச் சம்பவத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்தினார் என்ற குற்றச்சாட்டில் அரச சாரதி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.அவருக்கான குற்றப்பத்திரிக்கை தயாரிக்கும் போது ஏற்கனவே அவரது சாரதி அனுமதி பத்திரம் இடைநிறுத்த பட்டமை தெரியவந்தது.

இருந்த போதும் அச் சாரதி இன்னொரு அனுமதி பத்திரம் கைவசம் வைத்திருந்துளார்.அது எவ்வாறு வந்தது என வினவிய போது “எனது சாரதி அனுமதிப்பத்திரம் தொலைந்துவிட்டது என யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸ் அறிக்கை வழங்கப்பட்டது. அதனைப் பயன்படுத்தி புதிய சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொண்டேன்” என்று தெரிவித்தார்.

தானே குற்றத்தை ஒப்புக்கொன்ற குறித்த நபர் நீதிமன்றில்; ஆயர் படுத்தப்பட்டார்.இந்நிலையில் மதுபோதையில் வாகனம் செலுத்தியமை மற்றும் மோசடியாக புதிய சாரதி அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக்கொண்டமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் கீழ் சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.