இனம்தெரியாதவரின் சடலம் மீட்ப்பு

Print lankayarl.com in இலங்கை

இன்று காலை இனந்தெரியாத நபரொருவரின் சடலத்தினை மகியங்கனைப் பொலிஸார் மீட்டுள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலொன்றினையடுத்தே குறித்த சடலம் மகியங்கனையில் மீட்கப்பட்டது.

35 வயதை மதிக்கத்தக்க இந்நபர் குறித்து அடையாளம் காண பொது மக்களின் உதவியை பொலிசார் நாடியுள்ளனர்.

இச் சடலம் தற்போது மகியங்கனை அரசினர் வைத்தியசாலையின் பிரேத அறையில் சட்ட வைத்திய பரிசோதனைக்கென்று வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மகியங்கனைப் பொலிஸார் தொடர்ந்தும் புலன் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.