டிரக்உடன் மோதிய மோட்டார் சைக்கிள் :இருவர் பலி

Print lankayarl.com in இலங்கை

அங்குனுகொலபெலஸ்ஸ – வெட்டிய வீதியில் பிங்கம சந்தியில் நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

டிரக் வாகனம் ஒன்றும் உந்துருளியொன்றும் நேருக்கு நேர் மோதியதிலேயே இவ் விபத்து நிகழ்ந்துள்ளது.

விபத்தில் உந்துருளியில் பயணித்த 15 வயதான சிறுவனும், 24 வயதான இளைஞனுமே உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் டிரக் வாகனத்தின் சாரதி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.