நிதி சேகரித்தவரிடம் கைவரிசையை காட்டியவர் கைது

Print lankayarl.com in இலங்கை

நிதி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த நபரொருவரிடம் இருந்து ஒரு இலட்சத்து 70 ஆயிரம் ரூபா பணத்துடன் பணப்பையை கொள்ளையிட்ட சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 8 ஆம் திகதி நீர்கொழும்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசத்தில் நபரொருவர் நிதி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த சமயம்,

அவரிடமிருந்த ஒரு இலட்சத்து 70 ஆயிரம் ரூபா பணத்துடன் பணப்பையை மூன்று சந்தேக நபர்கள் கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பாக நீர்கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில்,

மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் குறித்த மூன்று சந்தேக நபர்களும் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணம் மற்றும் அதற்காக பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதோடு,

மேலதிக விசாரணைகளுக்காக அவை நீர்கொழும்பு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

குறித்த சந்தேகநபர்கள் 32, 36,37 வயதுடையவர்கள் எனவும், கொச்சிக்கடை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் சந்தேகநபர்கள் மூவரும் இன்று வெள்ளிக்கிழமை நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நீர்கொழும்பு பொலிஸார் மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.