வவுனியா வைத்தியசாலைக்கு அருகில் விபத்து:இருவர் படுகாயம்

Print lankayarl.com in இலங்கை

வவுனியா வைத்தியசாலைக்கு அருகில் முச்சக்கரவண்டியுடன் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

நேற்று காலை 10.30 மணியளவில் இடம்பெற்ற குறித்த விபத்தில் ஏ9 வீதி வழியாக வவுனியா நகருக்கு சென்று கொண்டிருந்த முச்சக்கரவண்டி வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன்பாக அமைந்துள்ள பாதசாரிகள் கடவையினை பாதசாரிகள் கடப்பதற்காக முச்சக்கரவண்டி நிறுத்தப்பட்ட வேளை அதே பாதையில் பயணித்த மோட்டார் சைக்கிள் நிறுத்தப்பட்ட முச்சக்கரவண்டியின் பின்புறமாக மோதி விபத்துக்குள்ளானது.

குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

படுக்கையமைந்த இருவரில் ஒரு சிறுவனும் அடங்குவார்.இதேவேளை இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.