சாவகச்சேரியில் 6 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது

Print lankayarl.com in இலங்கை

யாழ் சாவகச்சேரி பகுதியில் கைமாறப்படவிருந்த 6 கிலோ 6 கிலோ கஞ்சாவுடன் இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இன்று அதிகாலை இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் எழுதுமட்டுவாள் சேர்ந்தவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் கஞ்சாவினை பொதி செய்து கைமாறுவதற்கு தயாராக இருந்தவேளை சாவகச்சேரி போலீசாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் கைது செய்யப்பட்டார்.