மாணவியின் கையை துண்டாக்கிய அயல்வீட்டு நபர்

Print lankayarl.com in இலங்கை

குடும்ப பிரச்சனை காரணமாக பாடசாலை மாணவி ஒருவரின் கையை துண்டாக வெட்டிய சம்பவம் ஹட்டன் கொட்டகலை யூனிபில்ட் தோட்ட பகுதியில் இடம்பெற்றுள்ளது.

12 திகதி இரவு இடம்பெற்ற இச் சம்பவத்தில் உயர் தரத்தில் கல்வி பயின்று வரும் 18 மாணவியின் கையே வெட்டப்பட்டுள்ளது.

குறித்த மாணவியின் வீட்டாருக்கும் அயல் வீட்டாருக்கும் இடையில் ஏற்பட்ட குடும்ப பிரச்சினையின் காரணமாக மாணவியின் வலது கை துண்டாக வெட்டபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளதோடு சம்பவம் தொடர்பில் ஹட்டன் பொலிஸார் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.