தைப்பொங்கலுக்கு புத்தாடை வாங்காததால் தூக்கில் தொங்கிய மனைவி

Print lankayarl.com in இலங்கை

ஏறாவூர் பிரதேசத்தில் தைப்பொங்கலுக்கு புத்தாடை வாங்கி கொடுக்காததால் தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏறாவூர் பிரதேசத்தை சேர்ந்தவர் ஜீவராசா நிர்மலேஸ்வரன் (32) அவரது மனைவி செல்லத்தம்பி புஸ்பராணி (26) இவர்களுக்கு நான்கரை வயதில் மகளொன்றும் உள்ளது.

இந்நிலையில் ஓடாவி தொழில்செய்துவரும் இவருக்கு சில நாட்களாக வேலை ஏதும் கிடைக்காத காரணத்தால் தைப்பொங்கலை கொண்டாட முடிஜெவில்லை.இருந்தும் மனைவி புது உடைகள் வாங்கித்தரும்படி கேட்டு நச்சரித்திருக்கிறார்.இவர் பணக்கஷ்டத்தை சொன்னபோதும் அதை பொருட்படுத்தாமல் பிடிவாதமாக இருந்துள்ளார்.

இருந்தும் கணவன் சித்திரை வருடப்பிறப்பிற்கு எடுத்துத்தருகிறேன் என்று கூறியிருக்கிறார்.இதனால் ஆத்திரமடைந்த மனைவி “இரு உனக்கு காட்டுறன் வேல ” என்று சொல்லிவிட்டு வீட்டுக்குள் சென்று கதவை பூட்டியுள்ளார்.


குழந்தையுடன் விளையாடிக்கொண்டிருந்த கணவன் அதிக நேரமாகியும் வீட்டுக்குள் சென்ற மனைவி வெளியே வராததால் கதவை தட்டி கூப்பிட்டிருக்கிறார்.ஆனாலும் எந்த பதிலும் வரவில்லை.

இதனால் சந்தேகமடைந்த கணவன் வீட்டின் யன்னலை உடைத்து உள்ளேசென்ற பொது சாரி ஒன்றில் மேலே இருந்த காற்றாடியில் கட்டி தூக்கில் தொங்கியநிலையில் இருந்துள்ளார்.உனடியாக அதை அறுத்து அவசரமாக சந்திவெளி பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோதும் வைத்தியர் அவர் இறந்துவிட்டார் என்ற தவளை தெரிவித்தார்.

விடையமறிந்த ஏறாவூர் போலீசார் இதுதொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு சடலம் கணவரிடம் ஒப்படைக்க பட்டது