போதைமாத்திரைகளுடன் சிக்கிய வைத்தியர்

Print lankayarl.com in இலங்கை

வீரகுல பசியாலை பிரதேசத்தில் போதை மாத்திரைகளை வைத்து செயற்பட்ட போலி வைத்தியநிலையம் சுற்றிவளைக்கப்பட்டது.


வீரகுல போலீசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து நேற்று மதியம் குறித்த சுற்றிவளைப்பு இடம்பெற்றது.

இதில் பல்வேறு வகையான மருந்துகள் போதை மாத்திரைகளுடன் மீரிகம, பமுனுவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 59 வயதான வைத்தியர் கைது செய்யப்பட்டார்.

சந்தேகநபர் இன்று நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.