வவுனியாவில் நடைபாதை வியாபாரிகள் தீக்குளிப்போம் என போராட்டம்

Print lankayarl.com in இலங்கை

வவுனியா இலுப்பையடி பகுதியிலுள்ள நடைபாதை வியாபாரிகளை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்ட நகரசபையினருக்கும் நடைபாதை வியாபாரிகளுக்கும் பெரும் முறுகல் நிலை ஏற்பட்டது.

இலுப்பையடிப்பகுதியிலுள்ள நடைபாதை வியாபாரிகளை சில நாட்களுக்கு முன்பே அங்கிருந்து வியாபாரம் செய்வதை நிறுத்துமாறு கூறியபோது அவர்கள் அதை செவிசாய்க்காததால் இந்த நடவடிக்கை மேற்கொள்ள பட்டதாக நகரசபையினர் தெரிவித்தனர்.

இருந்தபோது நடைபாதை வியாபாரிகள் அவ் இடத்தை விட்டு நகர மறுத்தனர். அத்தோடு தீக்குளிப்போம் என போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் அப்பகுதியில் பெரும் பதற்ற நிலை காணப்பட்டது.

இது குறித்து நடைபாதை வியாபாரிகள் தெரிவிக்கையில் பள்ளிவாசலுக்கு முன்பாக நடைபாதையில் வியாபாரம் மேற்கொள்ளும் வியாபாரிகளை அகற்ற எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை அவர்களை அங்கிருந்து அப்புற படுத்தட்டும் நாங்களும் இங்கிருந்து செள்கிரோம் என்று தெரிவித்தனர்.

இதேவேளை சிலமாதங்களுக்கு முன்பு குறித்த பள்ளிவாசலுக்கு அருகிலுள்ள கடைகளை நகரசபையின் அப்புறப்படுத்த முயன்றபோதும் அவர்கள் போராட்டம் நடத்தியமையால் நகரசபையின் அங்கிருந்து அகன்றமை குறிப்பிடத்தக்கது.