பாடசாலை மாணவிக்கு பேரூந்தில் நடந்த கொடுமை

Print lankayarl.com in இலங்கை

பேரூந்து ஒன்றில் பாடசாலை சென்ற மாணவியை ஆபாசமாக படம்பிடித்த நபரை பொதுமக்கள் போலீசிடம் ஒப்படைத்துள்ளனர்.

குறித்த சம்பவம் கிரிதிவெல செல்லும் பேரூந்தில் இடம்பெற்றுள்ளது.குறித்த மாணவி பாடசாலை செல்வதற்காக தந்தையுடன் பேரூந்தில் பயணித்துளார்.

அவரது பாடசாலையை அண்மித்ததும் அவர் இறங்குவதாக பேரூந்தின் பின் கதவிற்கு அருகில் சென்றவேளை குறித்த கதவின் அருகிலிருந்த நபர் மாணவியின் ஆடைக்கு கீழ் கையடக்க தொலைபேசியை வைத்து காணொளி எடுத்துள்ளார்.

இதனை பேரூந்தில் பயணம் செய்த பிரயாணி ஒருவர் அவதானித்து மாணவியின் தந்தையிடம் விடையத்தை கூறியுள்ளார்.

பயணிகள் அவரை மடக்கி பிடித்து அவரது கைத்தொலைபேசியை சோதனையிட்டபோது மாணவியை மட்டுமல்லாது வேறு சிலரையும் அவ்வாறு ஆபாசமாக படம்பிடித்து தெரியவந்தது இதனால் அவரை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.