விடைத்தாள்கள் மீள்பரிசீலனையில் மாற்றம் தேவை:ஆசிரியர் சங்கம்

Print lankayarl.com in இலங்கை

இலங்கையில் பரீட்சைகளின் விடைத்தாள்களை மீள் பரிசீலனை செய்யும் நடைமுறையில் மாற்றங்கள் ஏற்படுத்துவது தொடர்பாக ஆசிரியர் சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது

சாதாரணதரப் பரீட்சையில் தோற்றிய மாணவியின் விடைத்தாளை மீள் பரிசீலனை செய்யுமாறு அண்மையில் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் மூலம் இது புலப்படுவதாக, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

2013 ஆம் ஆண்டு நடைபெற்ற சாதாரணதரப் பரீட்சையில் தோற்றிய மாணவி, தமது ஆங்கிலப் பாட பரீட்சை பெறுபேறுகளை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்து வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

குறித்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், விடைத்தாளை மீள் பரிசீலனை செய்யுமாறு பரீட்சைகள் திணைக்களத்திற்கு உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்த விடயம் தொடர்பில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பி பூஜிதவிடம் நியூஸ்பெஸ்ட் வினவியபோது, விடைத்தாள்களை மீள்பரிசீலனைக்கு உட்படுத்தும் நடைமுறை முழுமையாக புதுப்பிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.