திருமலையில் யானைதாக்கி ஒருவர் உயிரிழப்பு

Print lankayarl.com in இலங்கை

இன்று அதிகாலை காட்டு யானை தாக்கி திருகோணமலை – சேருநுவர பகுதியில்ஆணொருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் கிளிவெட்டி பகுதியைச் சேர்ந்த 58 வயதுடையவர் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர் தமது வீட்டுக்கு முன்னால் யானைகள் நடமாட்டம் உள்ளதை காணச்சென்ற வேளை யானைத் தாக்கிற்கு இலக்காகியுள்ளார் என கூறப்படுகின்றது.