போதைப்பொருட்களுடன் ஜேர்மன் நாட்டு பெண்கள் கைது

Print lankayarl.com in இலங்கை

ஹெரோயின் மற்றும் ஆன்சி போதைப்பொருட்களுடன் ஜேர்மன் நாட்டில் இருந்து இலங்கைக்கு சுற்றுலா வந்த இரு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த பெண்கள் இருவரும் வாடகை கார் ஒன்றில் நுவரெலியா பகுதிக்கு சென்றுகொண்டிருந்தபோது ஹட்டன், மல்லியப்பு பகுதியில் போலீசார் வழிமறித்து சோதனை செய்தபோது குறித்த போதைப்பொருட்களை வைத்திருந்தமை கண்டுபிடிக்க பட்டது.

போலீசார் குறித்த இரு பெண்களையும் கைது செய்து நீதிமன்றில் ஆஜர் படுத்தினர்.சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளையும் போலீசார் ஆரம்பித்துள்ளனர்.