ரயில் மீது கல் வீச்சு; சாரதி காயம்.

Print lankayarl.com in இலங்கை

காலி ரயில் நிலையத்திலிருந்து பெலிஅத்த ரயில் நிலையம் நோக்கி புறப்பட்டுக்கொண்டிருந்த ரயிலொன்றின் மீது இடம்பெற்ற கல் வீச்சுத் தாக்குதலில், ரயில் சாரதி காயமடைந்த நிலையில், பெலிஅத்த மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக, பெலிஅத்த பொலிஸார் தெரிவித்தனர்.

பெலிஅத்த ஒவிலான பகுதியில் நேற்றிரவு 10.45 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.
அத்தோடு, இச்சம்பவத்தின்போது ரயிலின் முன் கண்ணாடியும் சேதமடைந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பான விசாரணையை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.