ரணில், மஹிந்த இருவருமே தேசிய சொத்துக்களை சூறையாடியவர்கள்! ஜே.வி.பி. தெரிவிப்பு

Print lankayarl.com in இலங்கை

மஹிந்த ராஜபக்ஷவிற்கோ, ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கோ மீண்டும் நிலையான ஆட்சியமைக்க மக்கள் விடுதலை முன்னணி ஒருபோதும் ஆதரவு வழங்காது எனத் தெரிவித்த மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் நிலந்த ஜயதிஸ்த, இவ்விருவருமே தேசிய சொத்துக்களை சூறையாடிய ஊழல்வாதிகள். இவர்கள் சட்டத்தில் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்றார்.

அத்துடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அரசியல் சூழ்ச்சியினை தோற்கடிக்கவே முயற்சிக்கின்றோமே தவிர எவருக்கும் விலைபோய் ஆதரவு வழங்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.